fbpx

முதல் இரவில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, மனநலம் பாதிக்கப்பட்டவரா மாப்பிள்ளை..!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன், பரமேஸ்வரி தம்பதிகளின் மகள் நளினி(26) க்கும், நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) கடந்த 27 ஆம் தேதி மண்டபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக 12 பவுன் நகை , ஒரு மோட்டார் சைக்கிள், மற்றும் ரூ 3 லட்சத்திற்கு வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வழங்கினோம். திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டில் எங்கள் பெண்ணுக்கு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். அப்பொழுது மாப்பிள்ளை என் மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார். முதலிரவு அறைக்கு வெளியே இருந்த எங்களுக்கு எங்கள் மகளின் அலறல் சப்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடினோம். ஆனால் புதுமாப்பிள்ளை ராஜ்குமார் தப்பி ஓடி விட்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்பொழுது எங்கள் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல் நடந்துக் கொள்கிறார். எனவே மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நளினி, அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் பயத்துடன் இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். உண்மையில் ராஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவரா? கல்யாணம் பண்ணி வைச்சா எல்லாம் சரியாகிடும் என்கிற நம்பிக்கையில் அவரது பெற்றோர், அவர்களது மகனுக்கு நளினியை திருமணம் செய்து வைத்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Rupa

Next Post

இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்... வானிலை மையம் தகவல்...

Sat Jul 2 , 2022
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ […]

You May Like