நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் சமயத்தில் திடீரென்று பாய்ந்த புலியால் வாகன ஓட்டுகள் அச்சமடைந்தனர். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து காணப்படுகின்றது.
இத்தகைய நிலையில் தான் உதக மண்டலம் அருகே உள்ள கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையில் 36வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து சென்றது.
இதன் காரணமாக, வாகனத்தில் இருந்தவர்கள் பிதி அடைந்தனர். கண்ணிமைக்கும் சமயத்தில் பாய்ந்து சென்ற புலியை வாகனத்தில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது புலி சாலையை கடந்தது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.