முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (96) வயது மூப்பின் காரணமாக ,உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்ற வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரிய குளத்தில் இருக்கின்ற பன்னீர்செல்வத்தின் இழப்பிற்கு பழனியம்மாள் கொண்டுவரப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவருடைய இல்லத்தில் நேற்று இரவு திடீரென்று காலமானார். இது தொடர்பான விவரம் அறிந்த பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து உடனடியாக தேனிக்கு விரைந்தார். தன்னுடைய தாயாரின் உடலை பார்த்தவுடன் அவரது காளை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார். பன்னீர்செல்வம் அருகில் இருந்த அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரை தேற்ற முயற்சி செய்தார்கள்.
பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.