fbpx

ஓபிஎஸ் மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏறிய நபர்….! விசாரணையில் அதிர்ந்து போன போலீஸ்….!

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ் அணி சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இதில் பேசிய ஓபிஎஸ் தொண்டர்களை ஒன்றிணைக்கும் தர்மயுத்தம் நடந்து வருகிறது இன்று முதல் நம்முடைய தர்மயுத்தம் ஆரம்பமாகிறது. அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடும் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை துரோகத்திற்க்கு சாவு மணி அடிப்பதற்கு நீங்கள் எல்லோரும் ஒன்றினைய செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தொண்டர்களுக்காக நான் எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். அடுத்ததாக அமையவிருக்கும் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சியாக தான் இருக்க வேண்டும். இந்த மாநாடு புரட்சி மாநா,டு வெற்றி மாநாடு ஆகும் என்று பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையிலும் இந்த மாநாட்டில் அதிமுகவின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தனர். இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இத்தகைய நிலையில், கத்தி உடன் ஒரு நபர் மேடையில் ஏறியதால் பரபரப்பு உண்டானது. அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகர் மாவட்டம் சீனிவாசகப்பேரி கிராமத்தை சேர்ந்த கருத்த பாண்டி என்பவர்தான் அந்த நபர் என்றும், விவசாய பிரிவு தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார் என்றும் தெரியவந்தது.

அதோடு அவர் தன்னுடைய பாதுகாப்புக்காக தான் கத்தி எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இவர் மீது ஏற்கனவே சில கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் காவல் துறை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது இதன் காரணமாக மாநாட்டு மேடை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Post

BreakingNews: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு….! இதுதான் காரணம்….!

Tue Apr 25 , 2023
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதர்களிடையே மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like