என் சி ஆர் பி தரவுகளின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 41,621 பேர் காணாமல் போயுள்ளனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதீர் சின்கா இது தொடர்பாக தெரிவிக்கும்போது காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் போலவே தீவிரமானவை என்று கூறியிருக்கிறார்.
காணாமல் போனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக வருட கணக்கும் காத்திருக்கிறார்கள். காவல்துறையை பொருத்தவரையில் இது போன்ற வழக்குகளை தள்ளுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019 -20 உள்ளிட்ட ஒரே வருடத்தில் மட்டும் 4,722 பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்.
அப்படி காணாமல் போனவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றார்களா? என்பது அந்த மாநிலத்திற்கே தெரியவில்லை. இது ஏன் என முன்னாள் அதிகாரிகள் பலர் அதிர்ச்சிகர தகவல்களை கூறுகிறார்கள் முன்னாள் கூடுதல் காவல் துறை இயக்குனர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி தெரிவிக்கும் போது காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் புகார்களில் பெரும்பாலானவை மனித கடத்தல் தொடர்பானவை ஆகும்.
மேலும் நான் கெடா மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்ற போது நாள்தோறும் ஊதியம் குறித்த வழக்கு இருந்தது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று சொந்த மாநிலத்தில் விற்பனை செய்துள்ளார். அங்கே விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். நாங்கள் அவளை காப்பாற்ற முடிந்தாலும் இதுபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் கேரளா மாநில பெண்கள் பற்றி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமர் மற்றும் உள்த்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.