பீதர் டவுன் பகுதியில் வசித்து வருபவர் ச சரத் (26). இவர் ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சரத்தும், பீதர் டவுன் பகுதியில் வசித்து வரும் சவீதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சவீதாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த சரத், அவரது வீட்டில் அவர்களது காதல் விவகாரத்தை கூறி, தனது குடும்பத்தினருடன் சவீதா வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சவீதாவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த சரத், வீட்டுக்கு வந்தவுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் சவீதா, தனது வீட்டின் அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பீதர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.