fbpx

பகுதி நேர வேலை வாய்ப்பு……! குறுஞ்செய்தியை நம்பி 39 லட்சத்தை இழந்த அதிகாரி….!

புனேயில் பன்னாட்டு பொறியியல் நிறுவனம் ஒன்றின் துணை மேலாளராக இருந்து வந்த ஒருவர் சைபர் மோசடியில் 39 லட்சத்தை இழந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக புனே காவல்துறை தெரிவித்ததாவது பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதாக அதோடு அதன் மூலமாக அதிக வருவாய் ஈட்ட முடியும் எனவும் தனியார் நிறுவனத் துணை மேலாளர் கைபேசிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மேலாளரும் ஆர்வத்தின் அடிப்படையில் அந்த இணைப்பை திறந்திருக்கிறார். நாள்தோறும் சில வீடியோக்களுக்கான இணைப்புகள் அனுப்பப்படும் எனவும், இந்த இணைப்புகளுக்கும் சென்று வீடியோவிற்கு விருப்பக்குறி இட்டால் ஒவ்வொரு விருப்பத்திற்கு ஏற்றவாறு அவருடைய கணக்கில் 50 ரூபாய் வரவாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல் நாள் அன்று அவருக்கு 18 காணொளிகளின் இணைப்பு அனுப்பப்பட்டிருந்தன. அனைத்து காணொளிகளுக்கும் அவர் விருப்பக்குறி இட்டார். ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் என 18 வீடியோக்கள் சேர்த்து அவருடைய கணக்கில் பிடித்தங்கள் போக 825 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதன் காரணமாக, மிகுந்த உற்சாகத்தில் இருந்த அவர் மறுநாளும் 18 வீடியோகளுக்கான இணைப்புகள் அனுப்பப்பட்டதால் அவற்றையும் லைக் செய்தார்.

ஆனால் இந்த முறை அந்த இணைப்புகளை திறப்பதற்கு முன்னர் அவருடைய கைபேசிக்கு மெசஞ்சர் செய்தியில் ஒரு குழுமத்தில் இணைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது, அவரும் இணைந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு வேறு சில இணைப்புகள் அனுப்பப்பட்டன அவற்றில் லைக் செய்வதற்கு முன்னர் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், அன்றைய வேலை முடிவடைந்ததும் அவருடைய முன் பணத்தொகையின் அடிப்படையில் கூடுதல் பணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் 16,800 ரூபாய் பணத்தை அந்த குழுமத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கணக்குக்கு அனுப்பி வைத்தார். அன்றைய தின வேலை முடிவடைந்ததும் அவருக்கென தனி கணக்கு ஏற்படுத்தப்பட்டு அதில் ரூபாய் 27,650 வரவு வைக்கப்பட்டது அன்றைய மறு தினமும் இதே போல ரூபாய் 6.82 லட்சத்தை பரிவர்த்தனை செய்தார். வேலையின் முடிவில் அவருடைய கணக்கில் 9 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இப்படியாக ஒட்டுமொத்தமாக தனி கணக்கில் 40 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

ஆனால் அவர் அந்த தனி கணக்கில் இருந்த பணத்தை தன்னுடைய சொந்த வங்கி கணக்குக்கு மாற்ற முயற்சி செய்தார் தனிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அவரும் 20 லட்சம் ரூபாய் பணத்தை அந்த குறுஞ்செய்தியின் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னரும் அவரால் தன்னுடைய தனி கணக்கிலிருந்து 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்ட அவர், சைபர் குற்றப்பிரிவை நாடி சென்றார். இந்த சைபர் மோசடியில் அவர் தன்னுடைய சொந்த பணம் 39 லட்சத்தை இழந்துள்ளார் என்று துணை காவல் துறை கூறியுள்ளது

Next Post

ஷாப்பிங் செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! கணவரைப் பார்த்துக்க ஹஸ்பண்ட் கேர் துவக்கம்..!!

Thu May 11 , 2023
பெண்களுக்கு குட் நியூஸ்.. இனி ஷாப்பிங் போகும் போது தொல்லைகள் இருக்காது. இந்த சைஸ் சரியா இருக்காது என்றோ… துணியை எடுத்துக் காட்டும் சேல்ஸ் பெண்களிடம் அந்த கலரை எடுங்க என்று வழிந்தப்படியே ஜொல்லு விடுவதோ என எந்த இம்சையும் இல்லாமல் உங்க கணவரை கழட்டி விட்டுட்டு ஜாலியா ஷாப்பிங் செல்லலாம். கணவரைப் பார்த்துக் கொள்ள ஹஸ்பெண்ட் கேர் வந்தாச்சு. எவ்வளவு நேரமா இங்கே இருக்கிறது என்கிற இம்சை கிடையாது. […]
ஷாக்கிப் செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! கணவரைப் பார்த்துக்க ஹஸ்பண்ட் கேர் துவக்கம்..!!

You May Like