தற்போதைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் எப்போதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு திரியும் கதையாக இருக்கிறது. ஏனெனில் பெண் பிள்ளைகளுக்கு எப்போது யார் மூலமாக ஆபத்து வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் கூனம்பட்டி புதூர் ரோஹோபோத் புது வாழ்வு இல்லத்தை சேர்ந்த மத போதகர் ஆண்ட்ரூஸ்(46). இவர் வீரபாண்டி தேவாலயத்திற்கு வருகை தந்தபோது ஒரு பெண்மணியிடம் தங்களுடைய குழந்தைகளை இங்குள்ள பள்ளியில் சேர்த்து விட்டு என்னுடைய விடுதியில் தங்கி படிக்க வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண்மணி, தன்னுடைய மகன் மற்றும் மகள்களை ஆண்ட்ரூஸ் விடுதியில் சேர்த்துள்ளார். ஆனாலும் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு வந்து சிறுமியை விடுதியில் சேர்க்க ஆண்ட்ரூஸ் மறுத்துவிட்டார்.
இது குறித்து அந்த சிறுமியின் தாய் கேள்வி எழுப்பியபோது, கடந்த 14ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்த தன்னிடம் ஆண்ட்ரூஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயார் இது தொடர்பாக வழங்கிய புகாரினடிப்படையில் ஊத்துக்குளி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்ட்ரூசை நேற்று கைது செய்தனர்