கேரள மாநிலம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் வந்தனா (25) இந்த நிலையில், சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப் (45) என்பவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோலை பயன்படுத்தி பல முறை குத்தி இருக்கிறார். இதனைப் பார்த்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்தனர் அப்போது சந்தி தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இடம் பெண் மருத்துவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் மருத்துவர் வந்தனா house surgeon பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது.
போதைக்கு அடிமையான குற்றவாளி சந்தீப் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆவார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய காற்றில் குற்றவாளியான இவரை நேற்று இரவு காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோலால் இளம் பெண் மருத்துவரை குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.