ரஞ்சித்குமார் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னிடம் துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இணையதளம் மூலமாக 6 ,23,552 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.
அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தனி படை அமைத்து மோசடி நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் பணியில் இறங்கிய தனிப்படை காவல்துறையினர், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மோசடி செய்துவிட்டு பதுங்கி இருந்த விகாஸ்குமார் மிஸ்ரா கௌதம் குமார் உள்ளிட்ட இருவரையும் கைது செய்த போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 2,10,000 ரூபாயை மீட்டதுடன் ஒரு சிபியு, 5 கைபேசிகள் 5️ சிம் கார்டுகள், 14 ஏடிஎம் கார்டுகள், 5 வங்கி காசோலை புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதோடு பெரம்பலூர் அழைத்து வந்த காவல்துறையினர் அனைத்து நடைமுறைகளையும் முடித்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இணையதளம் மூலமாக பண மோசடி செய்துவிட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த விகார் மாநிலத்தைச் சார்ந்த இருவரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்த தனிப்படை காவல்துறையினருக்கு காவல்துறை அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.