தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வழக்கம்போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் எழுதிய இந்த பொது தேர்வில் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில் தங்களுடைய மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விருப்பம் கொள்ளும் மாணவர்கள் இன்று முதல் மறு கூட்டல் கூறி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் 275 என்றும் மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 350 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு 25 ரூபாய் என கட்டணம் செலுத்த வேண்டும் மாணவர்கள் இதற்கு தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் படித்த பள்ளிகளை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 13-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.