தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவருடைய மனைவி சண்முகத்தாய் (70). இவர்களுடைய மகள் மாரியம்மாள் இவர் குருவிகுளம் யூனியன் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தலைவராக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இளவன்குளம் அருகே இருக்கின்ற ரயில்வே தண்டவாளம் அருகே மாரியம்மாள் உடல் உயிரற்ற நிலையில் கிடந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தன்னுடைய மகளுடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை முத்து காலடி (57) மற்றும் அவருடைய நண்பர் சுப்பையா பாண்டியன் (58) என்ற நபருடன் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்து வந்தது.
ஆனால் திடீரென்று என்னுடனான கள்ள உறவை துண்டித்து விட்டு மாரியம்மாள் மற்றொரு வாலிபருடன் பழகி வந்தார். ஆகவே ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்தேன் என்று கூறியிருக்கிறார். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.