fbpx

மாணவிகளிடம் சில்மிஷம்! ராமநாதபுரம் அருகே 2 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது!

பெண்கள் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசும் இந்த தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை இன்றளவும் யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தான் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு சார்பாக செய்து தரப்பட்டு வருகிறது.

ஆனால் பெண்கள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி வேலைக்கு சென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் அந்த வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் தாண்டி அவர்களுக்கு மனரீதியாக பல பிரச்சினைகள் எழுகின்றன. அதாவது,வேலைக்கு செல்லும் இடத்தில் அங்கே பணிபுரியும் ஒரு சில ஆண்களால் அவர்களுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுவதால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சரி அலுவலகங்கள் தான் இப்படி என்றால், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் குரு என்ற உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பலமுறை தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது வெட்கக்கேடாக இருக்கிறது.

அந்த வகையில், நைனார் கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக தலைமை ஆசிரியர் மீதும் அவருக்கு துணை போன மற்றொரு ஆசிரியர் மீதும் காவல்துறை போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவயல் கிராமத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலருக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழங்குவதாகவும், அவருக்கு துணை போகும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவிகளை மிரட்டி வருவதாகவும் புகார் வந்தது.

இந்த நிலையில் தான் அந்த இரு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு வழங்கினர்.

இந்த சூழ்நிலையில், ஒரு மாணவி வழங்கிய புகாரினடிப்படையில் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (56), அவருக்கு இந்த விவகாரத்தில் துணை போன ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்ற செந்தில்வேல்(36) உள்ளிட்டோர் மீது நயினார் கோவில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருக்கின்ற இந்த இரு ஆசிரியர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Post

ட்விட்டர் ஊழியர்களை வீட்டிலிருந்தே கழிப்பறை காகிதங்களை கொண்டுவர சொன்ன எலான் மஸ்க்..!! ஏன் தெரியுமா..?

Sat Dec 31 , 2022
ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வாடகை செலுத்துவதைத் தவறவிட்ட எலான் மஸ்க், அதன் 4 […]
ட்விட்டர் ஊழியர்களை வீட்டிலிருந்தே கழிப்பறை காகிதங்களை கொண்டுவர சொன்ன எலான் மஸ்க்..!! ஏன் தெரியுமா..?

You May Like