தற்போதயெல்லாம் படித்து டாக்டர் பட்டம் வாங்குவதைவிட கொடுக்க வேண்டிய இடத்தில் பணம் காசை கொடுத்து கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்கி வைத்துக் கொள்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பல அரசியல் கட்சி தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது இதில் வேறு விதமான மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சார்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆம் தேதி விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, youtube பிரபலமான கோபி மற்றும் சுதாகர் போன்ற பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற விவேகானந்தர் அரங்கத்தை அந்த அமைப்பினர் வாடகைக்கு எடுத்திருந்தனர்.
மேலும் பல பிரபலங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி இருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து முனைவர் பட்டம் வழங்கியது. தனியார் அமைப்பிற்கு அரங்கம் வாடகைக்கு விடப்படாத நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரை கடிதம் கொடுத்ததாக தெரிவித்து பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கூறப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்திருக்கிறார்
இதே போல ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாகத்திடம் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த அமைப்பினர் பொய்யான தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்ற நபர் மீது 7️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ஹரிஷ் தலைமறைவான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். மேலும் அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் இன்று காலை ஹரிஷ் என்பவரை ஆம்பூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.