fbpx

பாலியல் உறவுக்கு மறுத்த காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த போதை காதலன்…..! ஆந்திராவில் கொடூரம்…..!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இருக்கின்ற துக்கிரால நகரை சேர்ந்த ஒரு மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் பி டெக் 2ம் ஆண்டு படித்து வருகின்றார். அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருட காலமாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அந்த மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்ற இளைஞர் அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தி இருக்கிறார். அதோடு அந்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு சம்பவம் நடைபெற்ற அன்று காலையில் கடுமையான போதையில் இருந்த அந்த இளைஞர் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தி இருக்கிறார். ஆனாலும் மாணவி இதற்கு சம்மதிக்கவில்லை. ஆகவே கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்துள்ளார்.

எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி ஒரு வழியாக பலத்த காயத்துடன் வீட்டிற்கு வந்து தன்னை அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார்.

இதற்கான காரணம் தொடர்பாக விசாரித்த போது அணுகி தன்னை காதலித்து வந்ததாகவும், கல்லூரியிலிருந்து அழைத்து வந்து 15 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றி அவர் தன்னை சித்திரவதை செய்ததாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, படுகாயமடைந்த மாணவியை தற்போது வேலூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவருடைய பெற்றோர்கள் அனுமதித்திருக்கிறார்கள் அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாக இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றன.

Next Post

55 வயது லிவ் இன் பார்ட்னரை நண்பருடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற இளம்பெண்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Mon Apr 24 , 2023
மும்பை டோம்பிவிலி பகுதியில் 55 வயது நபர் கொலை வழக்கு தொடர்பாக இளம்பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அந்த இளம்பெண்ணும் 55 வயது நபரும் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துள்ளனர். இதில் முறிவு ஏற்படவே அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “சனிக்கிழமை இரவு 55 வயதான மாருதி ஹண்டேவுக்கும் அவரது லிவ் இன் பார்டனரான […]

You May Like