சைலேந்திரபாபு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் தமிழகத்தில் குற்ற செயல்களை முற்றிலுமாக தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அப்போது காவல் நிலையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், சென்னை ஐ சி எப் காவல் நிலையத்திற்கு நேற்று திடீரென்று டிஜிபி சைலேந்திரபாபு சென்றார். அங்கே பணிகள் தொடர்பான ஆய்வை நடத்தி இருக்கிறார்.
அப்போது காவல் நிலைய பதிவேடுகளை எடுத்து பார்த்துவிட்டு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பொதுமக்களிடம் கனிவுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.