fbpx

கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்த நபரை நம்பி ஹோட்டலுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….! கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை…..!

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சுபைர்(36). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய அந்த இளம் பெண்ணும் அவருக்கு சிறிது சிறிதாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய அந்த இளம் பெண்ணும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது சுபைர் மயக்க மருந்து கலந்த ஜூசை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

அந்த ஜூசை குடித்த சற்று நேரத்தில் அந்த இளம் பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த நபர் அந்த இளம் பெண்ணை பலாத்க்காரம் செய்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கைபேசியில் போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை அந்த நபர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தும் மனமிறங்காத அந்த ஆண், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

நாட்கள் செல்ல, செல்ல அவருடைய தொந்தரவு அதிகரித்து போனதால் பொறுமை இழந்த அந்தப் பெண் பரவூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகார் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த காம கொடூரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

இந்தியாவில் 11,000-ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு.. இந்த 2 மாநிலங்களில் அதிக பாதிப்பு..

Fri Apr 14 , 2023
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு […]
இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்..!

You May Like