fbpx

மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால் ஆத்திரம்….! கல்லூரி முதல்வரை பெற்றோர் ஊற்றி எரித்த மாணவன்…….!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் பிரபலமான பிஎம் பார்மசி கல்லூரி இருக்கிறது. இங்கே கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50) இவர் நேற்று மாலை கல்லூரி பணி முடிவடைந்து 4 மணி அளவில் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அவரை திடீரென்று வழிமறித்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். உடனடியாக கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் அந்த மாணவர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90% அவர் உயிருக்கு போராடி வருவதாக சொல்லப்படுகிறது. தீவைத்து எரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தார்கள்.

காவல்துறையினரின் விசாரணையில் அவன் ஒரு முன்னாள் மாணவன் என்பதும், தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை வழங்க கோரி பலமுறை முதல்வரை சந்தித்திருந்தும் அவர் மதிப்பெண் சான்றுகளை வழங்காமல் இழுத்தடித்ததால் ஆத்திரத்தின் உச்சத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

வாரிசு திரைப்படத்தில் நடித்ததற்கு சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

Tue Feb 21 , 2023
தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் இளைய தளபதி விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் வாரிசு தில் ராஜு தயாரித்த இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, சியாம், ஸ்ரீகாந்த் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் பொதுமக்களிடையே காணப்பட்டாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது […]

You May Like