ராமநாதபுரம் அருகே லாந்தை என்ற கிராமத்தில் ஜி டி எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்று தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று இருந்தது. இந்த கோபுரம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கருத்தமுத்து, பெருமாயி, நித்யானந்தம்மாள், கிருஷ்ணமூர்த்தி, மங்களேஸ்வரி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டு இருந்தது.
இந்த கோபுரத்தின் செயல்பாடு கடந்த சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனத்தின் மேலாளரான சென்னையை சேர்ந்த தாஜ்மல்கான் வந்து பார்த்தபோது 28.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் கோபுரம் மற்றும் மின் சாதன பொருட்கள் உள்ளிட்டவை மாயமாகி போனது தெரியவந்தது.
இது தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.