அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்து ஆசை வார்த்தை கூறி கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு சில நாட்கள் கழித்து சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த கிரகத்திற்கு காரணமானவர் யார் என்பதையும் அறிந்து கொண்டனர். மேலும் சிறுமி வில்வேந்திரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அப்போது வில்வேந்திரன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பள்ளி ஆசிரியரான வில்வேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.