fbpx

என்கிட்ட அழகான பொண்ணுங்க இருக்கு வரியா…..? உல்லாசத்திற்கு அழைத்த புரோக்கர் போலீசில் சிக்கியது எப்படி….?

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார் (36) இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய வீட்டில் அழகான இளம் பெண்கள் இருக்கிறார்கள், 500 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குறிப்பிட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டிற்குள் ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் ஒருவர் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த வாலிபரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் ராஜேஷ் (38) என்பதன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது. அதோடு இந்த விபச்சார தொழில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

கைக்குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த திருவாரூர் இளைஞர்..!! மனமார வாழ்த்திய உறவினர்கள்..!!

Thu May 4 , 2023
பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழ்ந்த திருவாரூரை சேர்ந்த வாலிபர் தனது காதலியை 9 மாத குழந்தையுடன் திருமணம் செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் தம்பதியினர் சொக்கலிங்கம் – புஷ்ப லதா. இவர்களின் மகன் ரமேஷ் அரவிந்தர் (33) பிலிப்பைன்ஸில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பிலிப்பைன்சில் வேலை பார்த்து […]
கைக்குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த திருவாரூர் இளைஞர்..!! மனமார வாழ்த்திய உறவினர்கள்..!!

You May Like