fbpx

புதுவையில் நடுக்கடலில் காவல்துறையினர் திடீர் சோதனை….! காரணம் என்ன…..?

புதுவையில் கடலோர காவல் நிலைய காவல்துறையினர் நேற்று புதுச்சேரி கடலோர பகுதிகள் மற்றும் கடலில் திடீரென்று தீவிர சோதனையில் இறங்கினர். இதனை அடுத்து புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகத்திலிருந்து வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு, பணித்திட்டு, நரம்பை மூர்த்தி குப்பம் வரையில் 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரையில் சென்று சோதனை செய்தனர் காதல் கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் காவல்துறையினர் இந்த சோதனையில் இறங்கி இருந்தார்கள்.

சுருக்கு மடி வளையை பயன்படுத்த நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதிலும் 12 நாட்டிகள் மைல் தாண்டி தான் வலையை பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா? என்பதை சோதனை செய்ய இந்த சோதனை நடைபெற்றதாக கடலோர காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அத்துடன் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட நாட்களைக் கடந்து சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே செருக்குமடிவலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோதமான செயல்பாடுகளில் யாராவது ஈடுபடுகிறார்களா என்பது தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனை அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Next Post

காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை... மீண்டும் பரபரப்பு

Sun Feb 26 , 2023
ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்.. காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது… அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்.. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அச்சான் பகுதியில் உள்ள […]

You May Like