fbpx

புதுக்கோட்டை ஆடிப்பூர திருவிழா தேர் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவிலாகும். தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களது குல தெய்வமாக இத்திருக் கோவில் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வெவ்வேறு அலங்காரத்தில் தினமும் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் கடந்த 31-ஆம் தேதி நடந்தது. அப்போது தேர் நிலையில் இருந்து புறப்பட்ட தேர் சிறிது தூரம் சென்றதும் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த தேர் விபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அரிமலம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி(59) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தேர் விபத்தில் சிக்கிய ஒருவர் ஒரு வாரத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

மகள் காதலித்தது பிடிக்காததால் இதை செய்தேன்... தந்தை செய்த கொடூர சம்பவம்...!

Sun Aug 7 , 2022
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ளவர் நவீன் குமார். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவரின் மகள் ஒருவரை காதலித்தார், இது தெரிந்த நவீன் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல முறை எச்சரித்தும், அவரது மகள் எதையும் கண்டு கொள்ளாமல், அவர் காதலித்தவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதை கண்ட அவரது தந்தை நவீன் குமார் ஆத்திரமடைந்தார். இந்நிலையில், நவீன் குமாரின் மகளுக்கு காலில் அடிபட்டதாக […]

You May Like