fbpx

அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ரகானே……! மீண்டும் அணிக்கு திரும்பியது எப்படி…..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இதில் சுப்மன் கில், புஜாரா விராட் கோலி, அஸ்வின், அஜின்கியா ரஹானே, கே எல் ராகுல், கே எஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்படேல் சர்துல் தாக்கூர், முகமது சாமி முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் உள்ளிட்டோர் பிடித்து இருக்கிறார்கள்.

இந்த வருட வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மறுபடியும் அணியில் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் 34 வயதான இவர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 2013ஆம் வருடம் முதல் 2022 ஆம் வருடம் வரையில் 82 போட்டிகளில் களமிறங்கி 12 சதம் 25 அரை சதம் என்று 4931 ரன்களை சேர்த்துள்ளார்.

ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக விளையாடிய அவருடைய ஆட்டத்துடன் 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது 2020 ஆம் ஆண்டு முதலான 3 வருடங்களில் 19 போட்டிகளில் விளையாடி மகானே 809 ரன்களை மட்டுமே சேர்த்தார். 3 வருடங்களில் சராசரி 25.5 என்பதே அவரை அணியிலிருந்தும், பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தப்பட்டியலிலிருந்தும் நீக்குவதற்கு காரணமாக இருந்தது.

இந்திய அணியில் இருந்து அதிரடியாக ஒதுக்கி வைக்கப்பட்ட ரஹானே ரஞ்சிக்கோப்பை தொடரின் களம் இறங்கினார் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் சேர்த்து தன்னுடைய திறமையை அவர் நிரூபித்து காட்டினார். அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக இரட்டை சதமும், அசாம் மாநில அணிக்கு எதிராக 191 ரன்களும் சேர்த்து தேர்வு குழுவிற்கு தனது பேட்டிங் மூலமாக தேர்வு குழுவுக்கு அவர் பதில் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 போட்டியில் விளையாடி 2 அரை சதத்துடன் 209 ரகளை அவர் சேர்த்துள்ளார்

Next Post

”ஒளியிலே தெரிவது தேவதையா”..? அழகி திரைப்பட நடிகையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..!!

Wed Apr 26 , 2023
தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நந்திதா தாஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அழகி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட, இந்த படம் இன்னமும் மனதோடு கதை பேசிக்கொண்டுதான் இருக்கிறது. மனதிற்குள் எத்தனைக் காதல் வந்தாலும், மனதில் முளைவிட்ட […]

You May Like