கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள்.
சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் பாதித்து விடுமோ? என்ற அச்சம் காரணமாக, பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
ஒட்டுமொத்த நாடும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, அச்சத்தில் இருந்தாலும் இந்த ரணகளத்திலும் ஒரு சிலர் குதூகலமாக இருக்க நினைத்திருக்கிறார்கள்.
அதாவது தமிழகத்தில் நோய் தொற்று பரவல் 2வது ஆலை கோரத்தாண்டவமாடிவந்த போது அரசு மருத்துவர்கள் சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. ஆகவே அவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பகுதிகளில் அரசு செலவில் தனியார் தங்கும் விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில். தான் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் உள்ளிட்ட 2 மருத்துவர்களும் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற தனியார் தங்கும் சொகுசு விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர்.
அதே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 2 பெண் மருத்துவர்களும் அந்த விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது மருத்துவர் வெற்றிச்செல்வன் ஒரு பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் மற்றும் பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்திருக்கிறார். இது குறித்து 2 பெண் மருத்துவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் புகார் வழங்கினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் மோகன்ராஜ் மற்றும் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட இருவரும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தியாகராய நகர் காவல் துறை ஆணையரிடம் இரு தொடர்பாக புகார் வழங்கினார். இந்த புகார் குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை செய்த பின்னர் வெற்றிச்செல்வன் மீது பாலியல் பலாத்கார் வழக்கும், மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகவே 2 மருத்துவர்களையும் கைது செய்து காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.
மேலும் இந்த 2 மருத்துவர்களும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நேற்று நீதிபதி இந்த வடக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாலியல் பலாத்காரம் வழக்கில் மருத்துவர் வெற்றிசெல்வனுக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையும், 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.