ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிகொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருக்கிறது. ஆகவே அந்த சிறுமையை அந்த மூவரும் கடத்திச் சென்று, கடத்திச் சென்றவர்களில் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
அதே சமயத்தில், இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று அந்த சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள். இதனால், அந்த சிறுமி பயந்து போய் இருந்த நிலையில், மறுநாளும் அதே போல அந்த சிறுமியை மிரட்டி அதே வீட்டில் வைத்து மறுபடியும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். இதனால் அந்த சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டதாக தெரிகிறது.
அந்த சிறுமி சோர்வுடன் இருப்பதை கவனித்த பெற்றோர்கள் அந்த சிறுமியிடம் இது தொடர்பாக விசாரித்து இருக்கிறார்கள். அப்போதுதான் அந்த சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியின் உறவினர் ஒருவரும் கடந்த 3 மாத காலமாக அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்தார் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஆகவே சிறுமியின் உறவினர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் இருவரையும் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். அதோடு தலைமறைவாக இருக்கும் 2️ பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.