சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பொது இடங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் நடந்தேறி வந்தனர்.ஆனால் தற்சமயம் அதையும் தாண்டி ஒரு மிகக் கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பாலியல் புகார் வழங்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஒரு 16வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சாந்தி(42), மேகலா(42), மாயா(45), கார்த்தி(27), கார்த்திகேயன்(27), சந்தோஷ்(30), சன்னாசி என்ற சமுத்திரபாடி(27), கௌதமன்(30) உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.
அந்த சிறுமியை இந்த நபர்கள் கடந்த 6 மாத காலமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது இந்த விசாரணையில் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக ஓய்வு பெற்ற எஸ்.ஐ மோகன்(61) என்பவரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்