fbpx

இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய வாலிபர்! வீட்டை தரைமட்டமாக்கிய மாநில அரசு!

இப்போதெல்லாம் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் ஊர் சுற்றி விட்டு பின்பு அவரின் தயவு தேவையில்லை என்றால் அவரை கழட்டி விடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக தென்படுகிறது.

தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் பெண்கள் ஆண்கள் ஏமாற்றுவதாக சொல்வார்கள், ஆண்கள் பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வார்கள் ஆனால் இருதரப்பிலுமே இது போன்ற நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதேபோல பெண்கள் விவகாரத்தில் தவறு செய்தால் அரசாங்கம் கொடுக்கும் தண்டனை என்பது கடுமையாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அப்படி தண்டனை கடுமையானால் மட்டும்தான் தவறுகள் குறையும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அப்படி கடுமையான தண்டனை வழங்கும் தைரியம் மாநில அரசுகளுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இளம் பெண்ணை அவருடைய காதலன் கொடூரமாக அடித்து உதைத்து அவர் மீது தாக்குதல் நடத்தும் ஒரு அதிர்ச்சி வீடியோ 2 தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. வைரலான இந்த வீடியோவில் இருந்த இருவரும் காதலர்கள் எனவும், அந்த வாலிபரிடம் காதலை தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் எனவும் அவர்கள் பேசுவதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அந்த இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுத்த அந்த இளைஞர், தொடர்ந்து அந்த என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அந்த இளம் பெண் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞரை வற்புறுத்தியதால் ஆத்திரம் கொண்ட அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணை வேகமாக தாக்கத் தொடங்கினார். நிலை தடுமாறி அந்த பெண் கீழே விழுந்த நிலையிலும், அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து மிக கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டார். இந்த கொடூர தாக்குதலை அங்கிருந்து நபர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக தங்களுடைய கைபேசியில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து மத்திய பிரதேச காவல்துறை தாமாக முன்வந்து அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியது பங்கஜ் திரிபாதி(24) எனவும், இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு இவர் அந்த பகுதியில் இருந்து தப்பி உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தலைமறைவாக இருந்து வந்தார்.

அந்த இளைஞரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை அவரை கைது செய்தது. தொடர்ச்சியாக மாநில அரசின் உத்தரவின் அடிப்படையில் ரேவாவில் இருக்கின்ற அவருடைய வீட்டை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை சார்ந்தவர்கள் ஜே சி பி இயந்திரத்தைக் கொண்டு இடித்து தரமாட்டம் ஆக்கினார். இந்த புல்டவுசர் தண்டனை குறித்து மாநில முதலமைச்சர் சிபிராஜ் சிங் சவுகான் தன்னுடைய வலைதள பதிவில் பதிவு செய்துள்ளார்.

அவருடைய பதிவில் பெண்களுக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலத்தில் யார் குற்றம் நிகரத்தினாலும், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது. குற்றவாளியின் மீது தரைமட்டமாக்கப்பட்டது அவருடைய ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். குற்ற சம்பவங்களுக்கு இந்த புல்டவுசர் தண்டனையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு தான் முதன் முதலில் பிரபலமாக்கியது. இதனை தொடர்ந்து மத்திய பிரதேசம் பிஹார், அசாம் போன்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

Next Post

2 மாத பச்சிளம் குழந்தையை கட்டை பையில் வைத்து ஆட்டோவில் விட்டுச்சென்ற கொடூரதாய்!

Mon Dec 26 , 2022
நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, பிறந்த கைக்குழந்தையை அனாதையை போல ரோட்டில் வீசி செல்வது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் […]

You May Like