கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கனகபுரம் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆகவே அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள் தற்சமயம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் இருப்பவருமான டி.கே சிவக்குமார் வெற்றியை வழங்கிய பொதுமக்களின் காலை தொட்டு வணங்குகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.