fbpx

ஓமந்தூரார் மருத்துவமனையில் புயலின் காரணமாக திடீரென்று உடைந்து விழுந்த கண்ணாடி மேற்கூரை! அமைச்சர் ஏ.வ. வேலு நேரில் ஆய்வு!

நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.அதோடு தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சாலையில் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தனர். அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டு வந்தனர்.இதே போல தமிழ்நாடு முழுவதும் இந்த புயலின் தாக்கம் காரணமாக, பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை சரி செய்வதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு பகுதியாக இந்த புயலின் காரணமாக, நேற்று பெய்த கனமழையினால் சென்னையில் மருத்துவமனை வளாகங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன, மழை நீரும் சில பகுதிகளில் தேங்கியிருக்கின்றன. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற தீக்காய சிகிச்சை பிரிவின் பின்புறம் ஒரு மரமும், மைதானத்தில் ஒரு மரமும் நேற்று சாய்ந்திருக்கின்றன. அவற்றை ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் நுழைவாயிலில் ஒரு மரமும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகே ஒரு மரமும் முறிந்து விழுந்திருக்கின்றன. அந்த மரங்களை தீயணைப்புதுறை வீரர்களின் உதவியுடன் உடனடியாக ஊழியர்கள் அகற்றினர்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 6வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மேற்கூறையிலிருந்த கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும், எந்த விதமான பாதிப்பும் உண்டாகவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று அங்கே நடைபெறுகின்ற பணிகளை ஆய்வு செய்தார்.

அதேபோல குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதியில் வெள்ளம் புகுந்தது, ஆகவே அங்கிருந்த உபகரணங்கள் எல்லாம் படுக்கையின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. சானடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனை வாயிலில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வருகை தந்தவர்கள் அவதிக்குள்ளாயினர். வெள்ள நீரை மருத்துவமனை நிர்வாகம் மோட்டார் மூலமாக வெளியேற்றியது.

Next Post

சித்ராவின் உடல் உறுப்புகள் என்ன ஆச்சு..? 2 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த தோழி..!!

Sun Dec 11 , 2022
சின்னத்திரை நடிகையும், சித்ராவின் நெருங்கிய தோழியுமான சரண்யா இரண்டு வருடங்கள் கழித்து தன் தோழியின் மரணம் குறித்து பேசியிருக்கிறார். விஜே சித்ரா பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் தான் ஏராளமான ரசிகர்களை பெற்றார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் இன்று வரை ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து வருகிறார். இப்போது அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரத்திற்கு இரண்டு நடிகைகள் வந்த […]
சித்ராவின் உடல் உறுப்புகள் என்ன ஆச்சு..? 2 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த தோழி..!!

You May Like