fbpx

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்……? வெளியான புதிய தகவல்……!

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 10 வருடங்களுக்கு பிறகு கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதி என்னவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பாகும்.

அதன் பிறகு தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. ஆனால் மாதம் தோறும் பெண்களுக்கு உரிமை துறையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்த திட்டத்தை இன்னும் திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையில், பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பரப்புரையில் கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3ம் தேதி அன்று ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமை தொகையை பெறுவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? என்ற பல கேள்விகள் மக்களிடையே காணப்படுகிறது.

அதன் அடிப்படையில், PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 35 கிலோ அரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்கும். அதே சமயத்தில் வயதுவரம்பு கணவரின் ஆண்டு வருமானம் உள்ளிட்டவையும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது அத்துடன் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாய்மார்களுக்கும் இந்தத் திட்டத்தின் மூலமாக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அயன்பர ரேஷன் அட்டையில் எந்த விதமான மாற்றமும் செய்ய தேவையில்லை எனவும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட உடன் அவரவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல 60 வயதிற்கும் மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்……! காரணம் என்ன……?

Mon Feb 27 , 2023
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டசபை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகின்றார் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற கபடி உள்ளிட்ட போட்டிகளை பார்வையிட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை […]

You May Like