தமிழகத்தில் பீகார், கர்நாடகா போன்ற வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை தமிழக மக்கள் தாக்குவதாக கடந்த சில தினங்களாக வதந்தி ஒன்று பரவியது.
இதனை வெறும் வதந்தி தான் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த மாநிலத்தில் இதற்காக ஒரு சிறப்பு குழுவை அமைத்து அந்த குழுவும் தமிழகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டது.
அதோடு பீகார் போன்ற வட மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தியாக பரவத் தொடங்கியது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவி வரும் வீடியோ போலியானது என்று காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கடந்த 2️ தினங்களாக பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநில ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் சென்னை கோவை போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டனர். வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல சமூக வலைதளங்களில் குழந்தைகளை பரப்பிய நபர் தொடர்பான விசாரணை காவல்துறையினரால் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
மேலும் வதந்திகளை பரப்புவோரை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், செங்கல்பட்டு அடுத்துள்ள புத்தேரியில் சென்ற 6️ மாதங்களாக வேலை பார்த்து வந்த மனோஜ் யாதவ் (43) என்ற நபர் சில வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் மறைமலைநகர் காவல்துறையினர் 5️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக மக்களால் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போலவும், வேலை பார்க்கும் இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது போலவும் போலியான வீடியோ வெளியிட்ட மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கிறது.