fbpx

உக்ரைனுக்கு மறைமுகமாக உதவும் அமெரிக்காவிற்கு…..! ரஷ்யா விதித்த அதிரடி தடை….!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்களுடைய நாட்டிற்குள் நுழைவதற்கு அதிரடியாக தடை விதித்திருக்கிறது ரஷ்யா. அதோடு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த நாடுகளுக்கு இடையிலான பூசல் உக்ரைன் போருக்கு பிறகு அதிகரித்து இருக்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத்மேயர்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் அடக்கம்.

இது குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பதிலடி வழங்கும் விதத்தில், இந்த நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறது.

ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அமெரிக்காவுக்கு சரியான பதிலடி வழங்கப்படும் என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டும். தடைக்கு ஆளான நபர்கள் ரஷ்யாவிற்கு எதிராக போலி கருத்துக்களை பரப்பி வருகின்றன. இதில் உள்ள சில நிறுவனங்கள் உக்கரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடியை வழங்கும் விதத்தில், 100க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை அமெரிக்க அரசு பிறப்பித்து, மேலும் உக்ரைன் நாட்டிற்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கி, ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா உதவி புரிந்து வருகிறது. இது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் தன்னுடைய பங்கிற்கு இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது ரஷ்யா.

Next Post

2000 ரூ நோட்டுக்களை டாஸ்மாக் கடைகளில் பெறக்கூடாதா…..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!

Sat May 20 , 2023
அரசு டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயினர். இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் […]

You May Like