fbpx

உலகின் மிக குளிரான நகரம் எங்கு உள்ளது தெரியுமா?

இந்திய மக்கள் காஷ்மீரில் தான் அதிக குளிரை கண்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்திலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் அந்த பகுதிகளில் குளிர் காலமாகத்தான் இருக்கும்.

இந்திய மக்களைப் பொறுத்தவரையில் அதிக குளிர் என்றால் அது காஷ்மீரில் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரை விட குளிரான பகுதி ஒன்று இருக்கிறது. ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அது இந்தியாவில் கிடையாது. மாறாக இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவில் தான் அப்படி ஒரு பகுதி இருக்கிறது.

உலகத்தின் மிக அதிக குளிரை தன் வசம் வைத்திருக்கும் இந்த நகரத்திற்கு ஒருமுறை நாம் சென்று பார்த்தோமானால் என்ன வெயில் என்று சகித்துக் கொள்ளும் நமக்கு இந்த நகரம் மிகப்பெரிய கொடூரமான நரகமாக காட்சியளிக்கும். ஆனால் இங்கே இருக்கும் மக்களுக்கோ அந்த நகரம் அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய்மண் என்று சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகரம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கின்ற சகா மாநிலத்தின் தலைநகரமாகும். குளிர்காலத்தில் இந்த நகரத்தின் வெப்பநிலை 44 டிகிரி பாரான்ஹீட் அளவுக்கு குறைந்து காணப்படும். இந்த நகரத்தின் மிக குறைந்த வெப்பநிலை கடந்த 1987 ஆம் ஆண்டு பிப்ரவரியில் -89 டிகிரி பாரன்ஹீட் அளவாக பதிவாகி இருந்தது.

0 நீர் பனிக்கட்டியாகும். அதுவே -44 டிகிரி பாரன்ஹீட் என்றால் உயிர் வாழ்வது என்பது மிகவும் கடுமையான போராட்டமாக இருக்கும். இந்த குழுவில் நாம் வெற்றுடம்புடன் நின்றால் மிக விரைவில் மரணத்தை சந்திப்போம். இந்த குளிரை தாங்கக்கூடிய சூடான சுவாச உடைகளைக் கொண்டு முழுமையான உடலையும் மறைத்தால் மட்டுமே இங்கு உயிர் வாழ்வது சாத்தியம்.

இந்த நகரம் லீனா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. குளிர்காலத்தில் இந்த நதி உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். இந்த நகரத்தின் வரலாறு சில நூற்றாண்டுகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. கிபி 1632 ஆம் வருடத்தில் சைபீரியாவை ஆய்வு செய்த ரஷ்ய கோசாக்ஸ் இன மக்களால் இந்த நகரத்தில் முதல்முறையாக மரங்களால் ஏற்படுத்தப்பட்ட கோட்டை ஒன்று கட்டப்பட்டது.

கோசாக்ஸ் இன மக்கள் உகரைன் மற்றும் ரஷ்யாவின் புல்வெளி பகுதிகளில் தோன்றிய கிழக்கு ஸ்லாவிய கிறிஸ்துவ பாரம்பரிய மக்கள் குழு என்று சொல்லப்படுகிறது.

இந்த மக்கள் அரை நாடோடிகளாகவும், அரை ராணுவ மாயமாக்கப்பட்ட மக்களாகவும் வாழ்ந்து வந்தனர். இவர்கள்தான் அந்த நகரத்தின் முதல் குடிமக்கள். அதன் பிறகு இந்த நகரம் சிறைவாசிகளுக்காக நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் கனிம வளங்கள் கண்டறியப்பட்ட பிறகு தான் இது ஒரு முறையான நகரமாக உருமாறியது. தற்சமயம் இந்த நகரத்தில் 2,50000க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் அந்த நகரத்தில் நவீன, உயரமான கட்டிடங்கள் சோவியத் கால அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பழைய மர வீடுகள் அனைத்தும் கலந்தவாறு காட்சி தருகின்றன. இந்த நகரம் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழமான உறைந்த மண்ணில் கட்டப்பட்டிருக்கிறது. இது எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உருகாது என்றும் சொல்லப்படுகிறது.

பெரும்பாலான கட்டிடங்களில் அடித்தளப் பகுதிகள் மிகவும் கடினமான மரங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே கட்டிடங்களின் வெப்பம் கீழே காணப்படும் குறைந்த மண்ணை எப்போதும் உருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

குளிர்காலத்தில் இந்த நகரம் மிகவும் குளிரான மூடுபனியின் காரணமாக, முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கும். குளிர்காலத்தில் தெருக்களில் நடந்து செல்ல கூட இயலாது. கோடை காலத்தில் நகரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இங்கே அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் இருக்கின்றன. வெயில் காலத்தில் லீனா நதியில் படகுகளில் பயணம் செய்யலாம். இந்த பயணத்தின் மூலமாக பல இயற்கையான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

யாகுட்ஸ்க் நகரத்தை சுற்றி இருக்கக்கூடிய நிலக்கரி, தங்கம், சுரங்கம் உள்ளிட்ட கனிம வளங்களால் பல சுரங்க நிறுவனங்கள் தங்களுடைய தலைமை இடத்தை இந்த நகரத்தில் அமைத்திருக்கின்றன. சுரங்கத் தொழில்தான் இந்த நகரத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் விமான போக்குவரத்தை நடத்தும் யாகுடியா ஏர்லைன்ஸ் தலைமையகமும் இந்த நகரத்தில் தான் இருக்கிறது.

ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவிற்கும், யாகுட்ஸ்க் நகரத்திற்கும் இடையிலான தூரம் சுமார் 8,468 கிலோமீட்டர் ஆகும். இரு நகரங்களும் லீனா நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டிருக்கிறது. யசைகா கோடை விழா ஜூன் மாதம் கடைசி வார இறுதியில் இந்த நகரத்தில் நடைபெறுகிறது. அந்த சமயத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் இங்கே நடைபெறும்.

Next Post

18 வயது வாலிபர்கள் மீது 45 வயது நடிகைக்கு ஒரு கண்ணாம்..!! சிக்கினால் அவ்ளோதானாம்..!!

Tue Dec 13 , 2022
சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் பெண்களுக்குத்தான் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருக்கிறது என்றால், ஆண்களுக்கும் இந்த டார்ச்சர் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நடிகைகள் இதை தைரியமாக வெளியே சொல்கின்றனர். ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பொதுப்படையாக பேச தயங்குகின்றனர். இருப்பினும், சில விஷயங்கள் மீடியாவில் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் 45 வயதை நெருங்கும் நடிகை ஒருவர் இளம் வாலிபர்களாக பார்த்து டார்கெட் செய்து வருகிறாராம். ஒரு […]

You May Like