fbpx

நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன ஒரு சுவாரசிய தகவல்……!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் பிரபல இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தற்போது சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய் பற்றி நமக்கெல்லாம் தெரியாத ஒரு தகவலை கூறி இருக்கிறார். அது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சில தனிப்பட்ட காரணங்களால், விஜய்க்கும், அவருடைய தந்தை சந்திரசேகருக்கும் சமீப காலமாக பேச்சுவார்த்தை இல்லை இருந்தாலும் தன்னுடைய மகன் தொடர்பான சிறுவயது செயல் ஒன்றை சந்திரசேகர் நினைவு கூர்ந்து உள்ளார்.

அதாவது, நடிகர் விஜய் பள்ளிப் பருவத்தின் போது நாள்தோறும் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டின் முன் வாசல் வழியாக உள்ளே வரமாட்டாராம். பின் வாசல் வழியாக சென்று அங்கு இருக்கும் ஒரு பைப்பின் மீது ஏறி முதல் மாடிக்கு வந்து விடுவாராம் நடிகர் விஜய். அப்படி பின் வாசல் வழியாக ஏறி வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் விஜய் என்று தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து உள்ளார் சந்திரசேகர்.

Next Post

Corona Virus..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!! மக்களே கவனமா இருங்க..!!

Thu Apr 20 , 2023
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து […]

You May Like