விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு கதைக்களமாக இந்த் தொடர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.
சில நேரம் விறுவிறுப்பாக இந்த தொடரின் கதைக்களம் சென்றாலும் சில நேரத்தில் கதை மிகவும் போர் அடிக்கும் விதமாக சொல்கிறது. தற்சமயம் ஐஸ்வர்யா, தனம், முல்லை உள்ளிட்ட மூவரும் கர்ப்பமாக இருப்பதை வைத்து சற்றேற குறைய 2,3 வாரங்களை இயக்குனர் கடத்திவிட்டார்.

தற்சமயம் இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் தொடரிலிருந்து திடீரென்று வெளியேறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் நேற்று இந்த தொடரில் இருந்து எதற்காக வெளியேறினேன் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் நான் தொடரில் இருந்து விலகி விட்டேன் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் கதை போகப் போக எனக்கு சரியாக படவில்லை. அது என்னுடைய சினிமா பயணத்திற்கு சரியாக இருக்காது என்று தோன்றியது என பதிவிட்டிருக்கிறார் சாய் காயத்ரி.