ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டம் கொண்டலவாடா பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண். அவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நாள்தோறும் பள்ளிக்கு நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் வாலி(30) என்ற நபரின் ஆட்டோவில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த ஆசிரியைக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. தனக்கு திருமணமானதை மறைத்து அந்த ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம் பெண் ஜாபரை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் ஜாஃபர் ஏதேதோ காரணத்தை சொல்லி தொடர்ந்து தட்டிக் கழித்து வந்துள்ளார். அத்துடன் அந்த ஆசிரியையை சந்திப்பதையும் தவிர்த்து கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு சென்ற போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதை அறிந்து கொண்ட அந்த இளம் பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.
மேலும் என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்ததால் ஜாஃபர் வாலி என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கதறியபடி அவர் தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது ஆகவே ஜாபர் வாலியின் உறவினர்கள் அந்த இளம் பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக கடும் கோபமுற்ற ஜாபர் வாலி காதலியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அவர்த்திட்டபடி காதலிக்கு போன் செய்து உன்னை இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்கின்றேன் என்று தெரிவித்து ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய அந்த இளம் பெண்ணும் அவர் கூறிய இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கே மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று உலாசமாக இருக்குமாறு தெரிவித்திருக்கிறார் ஜாகர் வாலி ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண், திருமணத்திற்கு பிறகு தான் எல்லாம் என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஆத்திரம் கொண்ட ஜாஃபர் வாலி அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்.
அதன் பிறகு அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அவருடைய சடலத்தை புதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அத்துடன் அந்த இளம் பெண்ணின் செல்போனை எடுத்து அவருடைய தங்கைக்கு காதல் விவகாரம் காரணமாக, தான் தற்கொலை செய்து கொள்வதாக குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார்.
இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு சந்தேகத்தின் பெயரில் ஆட்டோ ஓட்டுனர் ஜாபர் காலியிடம் விசாரணை நடத்திய போது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே ஜாபர் வாலி கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏரிக்கரையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை சார்ந்தவர்கள் இதனை தொடர்ந்து, ஜாக்கிரவாளியை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.