fbpx

அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு….! தலைமை ஆசிரியர் அதிரடி பணியிடை நீக்கம்…..!

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 249 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் மூலமாக இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், சென்ற 6ம் தேதி குழந்தைகளிடம் சத்து மாத்திரை அதிகளவில் கிடைத்திருக்கிறது. இதை வைத்து யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரையை சாப்பிடுவது என்று மாணவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. அதன் பேரில் மிட்டாய் சாப்பிடுவதைப் போல தொடர்ந்து மாணவர்கள் அதனை உட்கொண்டுள்ளனர்.

சற்று நேரத்தில் 2 மாணவர் மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர்களை மருத்துவமனையில் ஆசிரியர்கள் சேர்த்திருக்கிறார்கள் மாணவிகள் நான்கு பேரும் 30 முதல் 60 சத்து மாத்திரைகள் வரையில் சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. அவர்களுடைய உடல் நிலை மேலும் மோசமானதால் மேலே சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

உதகையைச் சேர்ந்த சலீம் என்பவரின் மகள் ஜெய்னபா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உதகை மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவிக்கும்போது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பிறகு வினியோகிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை என்று கூறினார்.

ஆகவே பள்ளி தலைமை ஆசிரியர் முகமதுஅமீன் மாத்திரை விநியோகம் செய்யும் கண்காணிப்பு ஆசிரியராகவும், ஆசிரியையாகவும் பணிபுரிந்து வந்த கலைவாணி உள்ளிட்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வித்துறை அலுவலர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

ஆஸ்கர் விழாவில் பேச அனுமதி கேட்ட உக்ரைன் அதிபர்.. தொடர்ந்து 2-வது முறை நிராகரிப்பு..

Fri Mar 10 , 2023
ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை அகாடமி நிராகரித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வரும் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போர் குறித்து உரையாற்ற உக்ரைன் அதிபர் ஜெலனஸ்கி திட்டமிட்டிருந்தார்.. ஆனால் ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.. ஆனால் அவரின் […]
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் தூதர்கள் நீக்கம்..! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

You May Like