விரைவில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரு கட்சிகளும் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் அங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றன. என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டரை ஆதரிக்கும் விதமாக ஹுபள்ளி தார்வாட் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக நாளை நண்பகல் கர்நாடகாவிற்கு செல்லும் சோனியா காந்தி பிற்பகல் 3 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்கிறார். நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் நகரில் 36 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.