fbpx

தமிழக மக்களுக்கு செந்தில் பாலாஜி சொன்ன குட் நியூஸ்…..! இனி கோடை காலத்தில் நோ பவர் கட்…..!

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் மிகப்பெரிய அதிருப்த்தியில் இருந்தனர்.

அதன் விளைவாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி 10 ஆண்டுகள் நீடித்தது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் 2011 ஆம் ஆண்டு சட்டசபை பொதுச் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் தான் சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் 10 வருடங்களுக்கு பின்னர் திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை கைப்பற்றி சற்றேற குறைய 2 ஆண்டுகள் நெருங்கி விட்ட நிலையில் இந்த அரசின் பல்வேறு செயல்பாடுகள் வரவேற்பையும் பெற்றுள்ளது, அதேபோல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

பொதுவாக கோடை காலங்கள் என்று வந்துவிட்டாலே தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள். வெயில் காரணமாக, உண்டாகும் புழுக்கம் மக்களை வாட்டி வதைக்கும். இந்த நிலையில், கோடை காலங்களில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூரின் பத்திரிகையாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி அடுத்த 3 மாதத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போதைய மின் தேவை 16.500 முதல் 17500 மெகாவாட் வரையில் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.

Next Post

பாட்டி வீட்டிற்கு வந்த புதுமண தம்பதி..!! 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிய தந்தை..!! சாதி மாறிய காதலால் விபரீதம்..!!

Sat Apr 15 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மகன் சுபாஷ் அனுஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். ஆனால், சுபாஷ் காதலை கைவிடவில்லை. […]

You May Like