fbpx

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த சீர்காழி எம்எல்ஏ…!

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் படகில் சென்று பார்வையிட்டடார்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கடலூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆறு ஓடிக்கொண்டிருப்பதால், இரண்டு கரைகளையும் தொட்டப்படி வெள்ள நீர் பழையாறில் உள்ள கடலில் கலக்கிறது.

தற்போது தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலை மேடு போன்ற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இப் பகுதிகளை சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், வட்டாச்சியர் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியகுழ தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளையும், பயிர்களையும் பார்வையிட்டனர். பிறகு அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.

Rupa

Next Post

அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் குடித்துவிட்டு மட்டையான பாஜக பிரமுகர்..! தூக்கிச் செல்லும் தொண்டர்கள்..!

Wed Jul 20 , 2022
குடிபோதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவைச் சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற […]

You May Like