fbpx

ஈரோடு இடைத்தேர்தல்….! காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராகும் திமுக தலைமை…!

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆளும் தரப்பான திமுக வரும் 24ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினும், 19 மற்றும் 20 உள்ளிட்ட தேதிகளில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென்று கடந்த மாதம் 4ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் .ஆகவே அந்த தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார்.

அதேபோல எதிர்க்கட்சியான அதிமுகவின் சார்பாக முன்னாள் சட்டசபை உறுப்பினர் தென்னரசு போட்டியிடுகிறார். பன்னீர்செல்வம் அணியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், செந்தில் முருகன் அந்த வேட்புமனுவை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில், அந்த கட்சி போட்டியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் இந்த இடைத்தேர்தலில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதோடு, டிடிவி தினகரன் அணியின் சார்பாக கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் அதிமுகவின் ஓட்டுகள் பிரிந்தனர்.

ஆனால் தற்போது அவர் இந்த இடைத்தேர்தலில் இருந்து பின் வாங்கி இருக்கின்ற நிலையில் எடப்பாடி அணிக்கு அந்த ஓட்டுக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பலமுனை போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மாறி இருக்கிறது. அதேநேரம் இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும், அந்த பகுதியில் திமுக நிர்வாகிகள் அதிக அளவில் குவிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலம் எங்களுடைய கோட்டை என்று நிரூபிப்பதற்காக அதிமுக தன்னை தயார்படுத்தி வருகிறது. அதற்காக 100க்கும் அதிகமான பொறுப்பாளர்களை எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணி என்று தனித்தனியாக நியமனம் செய்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் ஈ.வி. கே. எஸ் இளங்கோவனை ஆதரித்து வருகின்ற 24-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே சமயம், உதயநிதியும் வரும் 19, 20 உள்ளிட்ட தேதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சரும், ஈரோடு தொகுதி பொறுப்பாளருமான முத்துசாமி மேற்கொண்டு வருகின்றார்.

Next Post

அதிமுகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை…..! சிபிஎம் விலாசல்…..!

Wed Feb 8 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது .இதற்கான பிரச்சாரம் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த தேர்தலுக்காக ஆளும் தரப்பான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆதம்தரப்பாக இருக்கக்கூடிய திமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது அதே போல எதிர்க்கட்சியான அதிமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலம் […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like