பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள்.
அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் உயர்நீதிமன்றத்தில் மே மாதம் முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுத்தாக்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரணையும், நடைபெறும் எனவும் மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் மற்றும் புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.