fbpx

பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்! : அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி முதலியோர், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த புகார் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு முதன்மை கல்வி அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக புகார் எழுந்த, கணக்கு ஆசிரியர் கார்த்தியசாமியை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.

Rupa

Next Post

இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.. வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

Sun Jul 31 , 2022
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில், ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தர்மபுரி, சேலம், நாமக்கல் திருச்சி, பெரம்பலூர்‌, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கன முதல் […]

You May Like