fbpx

பட்டப்பகலில் ரயில்வே நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்…..! 2 வருடத்திற்கு பிறகு தற்கொலை….!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கின்ற ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27) இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த ஸ்வேதா( 21) என்ற எண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதலர்களான ராமச்சந்திரனும், ஸ்வேதாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட காதலன் ராமச்சந்திரன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன் பிறகு ராமச்சந்திரனும் தன்னுடைய கருத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் ராமச்சந்திரனை கைது செய்தார்கள். இந்த நிலையில் 2 ஆண்டு கால சிறை தண்டனைக்கு பின்னர் சமீபத்தில் அவர் ஜாமீனில் எழுதி இருந்தார் இது குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இத்தகைய நிலையில், மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில், ராமச்சந்திரன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த புளியமரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

முறை தவறிய உறவிலிருந்த மனைவியை தட்டி கேட்ட கணவனை அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்……!

Wed Mar 15 , 2023
கோயமுத்தூர் மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் காஞ்சிமலை பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அங்கிருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்ற நபர் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது. […]

You May Like