கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணி அளவில் வெளியாகும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், ஒட்டுமொத்தமாக 40,356 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 90.74% பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.20,081 மாணவர்களும் 20,175 மாணவிகளும் தேர்வு எழுதி இருந்தனர் இதில் 90.74% மாணவர்களும், 96.24% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 இலட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் உள்ளிட்டோர் தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை tnresults. nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்