அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும், சமூக வலைதளங்களில் ஒரு போலியான செய்தி சமீபத்தில் பரவி வருகின்றது. தமிழ்நாடு ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக பரவிய இந்த தகவல் உண்மை கிடையாது என்று தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைந்துள்ள செய்தி குறிப்பு ஒன்றில் தமிழக ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சென்னை 34 என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்ற விளம்பரத்தில், தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளதாகவும், அதனை பெறுவதற்கு முறையான ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பணம் செய்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் 1000 ரூபாய் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாக போலியான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனாலும் அது போன்ற அறிவிப்பு தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படவில்லை என்றும், இது போலியான தகவல் எனவும் இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை நம்பி யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இது போன்ற தகர தவறான தகவலை பரப்புபவர்கள் மீது காவல்துறையின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. எனவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.