தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் 94. 3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7,55,451 மாணவ, மாணவிகள் இந்த பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இந்த நிலையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த நந்தினி என்ற மாணவி பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவி 600 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வு இவருடைய கனவை பாழாக்கி விடும் என்று சமூக வலைதள வாசிகள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த மாணவி வணிகவியல் குரூப் எடுத்து படித்திருக்கிறார்.
அதோடு நீட் தேர்வு எழுத வேண்டும் என்றால் அதற்கு அறிவியல் அல்லது கணிதம் உள்ளிட்ட குரூப்புகளில் படித்திருக்க வேண்டும். தற்சமயம் 600 மதிப்பெண்கள் பெற்ற மனைவி நந்தினி வணிகவியல் எடுத்து படித்திருப்பதால் அவரால் நீட் தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.