கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்னசாமி திமுகவைச் சார்ந்த இவர் நாகோ ஜனகள்ளி பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் அவருடைய தம்பி பிரபு இருவரும் ராணுவ வீரர்களாக இருக்கிறார்கள் பிரபாகரன் கடந்த 8ம் தேதி அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே துணி துவைத்து கொண்டு இருந்தார்.
இதனை கண்டித்ததால் வாய் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை சின்னசாமி பத்துக்கும் அதிகமானவருடன் சென்று பிரபாகரன் பிரபு உள்ளிட்டோரை தாக்கி இருக்கின்றார். இதில் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குருசூரியமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதயன், வேடியப்பன் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். தலைமுறைவாக இருந்த திமுகவின் கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் இந்த சமூகத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 29 வயதான ராணுவ வீரர் பிரபு திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அறிவித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கின்ற சம்பவத்தை அறிந்தவுடன் அதிர்ச்சியும், கோபமும் ஏற்பட்டது. ராணுவ வீரர்களுக்கு திமுகவினரின் அராஜகம் காரணமாக, சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை என்று கூறியிருக்கிறார்.
தங்களுடைய உயிரையும் பெரிதாக கருதாமல் எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும் தற்சமயம் கொலையே செய்யும் அளவுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், அதோடு இது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.