தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் முஹம்மது ரஹ்மதுல்லா சையது அஹ்மது 2019 ஆம் வருடம் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இவர் அங்கு இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் இந்த சூழ்நிலையில், சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தொடர்வண்டிக்காக காத்திருந்த போது 28 வயதான தூய்மை தொழிலாளர் ஒருவரை ரஹமத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவல்துறை சார்ந்தவர்கள் அவரை நெருங்கி வந்தனர். அப்போது அவர்களையும் ரஹ்மத்துல்லாஹ் கத்தியை காட்டி மிரட்டியதுடன் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காவல்துறையினர் அவரை 3 முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். இதில் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த செய்தியை சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.